search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்ப படிவங்கள்"

    • வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யவும் நடவடிக்கை
    • குமரியில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 651 பேர் விண்ணப்பம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவங்கள் பொது மக்க ளுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு இருந்தது.

    முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. முதல் கட்ட முகாமில் 2 லட்சத்து 3 ஆயி ரத்து 268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி னார்கள். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்ட மாக விண்ணப்ப படி வங்கள் பெறப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த 18-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவுகளை சரிபார்க்கும் பணி நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது.

    764 ரேஷன் கடைகளிலும் விண்ணப்ப படிவங்களை அந்தந்த பகுதியில் அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கி றார்கள். ஆய்வு பணியின் போது சந்தேகம் இருப்பின் களப் பணியாளர்கள் அந்த வீட்டிற்கு சென்று நேரில் ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் ரேஷன் கார்டில் உள்ள சிலரின் பெயரை விடுவித்து விட்டு கலைஞர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப் பித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதை முறை யாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.

    ரேஷன் கார்டில் உள்ள அனைவரது பெயரும், கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படி வங்களில் எழுதப் பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் குடும்ப அட்டையில் உள்ள அனைவரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள்.

    எனவே குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் யாரா வது அரசு துறைகளில் வேலை பார்க்கிறார்களா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வீடுகளில் கார் வைத்திருந்தாலும் அவர்களது விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப படிவங்களை வருகிற 31-ந் தேதிக்குள் ஆய்வு செய்து இறுதிப்பட்டியல் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×